Tuesday, May 19, 2026
Homeசெய்திகள்அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு கைப்பேசி தடை..அதிரடி உத்தரவு!

அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு கைப்பேசி தடை..அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசுப் பேருந்து விபத்துக்களைத் முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் அத்தியாவசியப் பயணப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது கைப்பேசியைப் பயன்படுத்தத் தமிழ்நாடு அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் போது மட்டுமின்றி, தங்களின் சட்டைப் பையிலும் கைப்பேசியை வைத்திருக்கக் கூடாது என்றும், மீறி ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது; ஓட்டுநர்களின் கவனம் சிதறுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்த்து, பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments