Tuesday, May 19, 2026
Homeசெய்திகள்ரிஷிகேஷ் அருகே உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

ரிஷிகேஷ் அருகே உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ரயில் நிலையம் அருகே உஜ்ஜைனி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நடந்த உடனே ரயில்வே மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், நல்வாய்ப்பாக ரயிலில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எவ்விதப் பாதிப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது;

விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் மூலம் தங்களின் பயணத்தைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் ரயில் தடம் புரண்ட நிகழ்வு அப்பகுதியில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்தைப் பாதித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments