Wednesday, May 27, 2026
Homeசெய்திகள்இளைஞர்களை மீட்க டாப் கியரில் திமுக — செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலின்?

இளைஞர்களை மீட்க டாப் கியரில் திமுக — செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலின்?

திமுகவோட செயல் தலைவரா உதயநிதி ஸ்டாலினை உட்கார வைக்க கட்சிக்குள்ளே ரொம்ப நாளா சைலண்ட்டா நடந்து வந்த வேலைகள் இப்போ க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கீட்டதா அறிவாலய வட்டாரங்கள் பப்ளிக்கா பேசத் தொடங்கியிருக்காங்க.

நடந்து முடிஞ்ச சட்டமன்றத் தேர்தல்ல திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தோல்விக்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறா ஆராய தலைமை மூலமா அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழு, வர்ற ஜூன் 5-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு ரிப்போர்ட் ஒப்படைக்கப் போறாங்களாம்.

அந்த அறிக்கையில, “புது ஓட்டர்களான இளைஞர்களை திமுக பக்கம் ஈர்க்க நாம தவறிட்டோம், அவங்க எல்லாரும் அப்படியே தமிழக வெற்றிக் கழகம் பக்கம் தாவி கைகொடுத்துட்டாங்க; அதோட இளைஞரணிக்கு இந்தத் தேர்தல்ல போதிய முக்கியத்துவம் கொடுக்கலை; குறிப்பா உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தாம அவரோட தலையீடு இல்லாமலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதோடு, இளைஞரணியில அவர் சிபாரிசு செஞ்ச பலருக்கு வாய்ப்பும் மறுக்கப்பட்டதுதான் இந்த சறுக்கலுக்கு முக்கிய காரணம்” அப்படின்னு பாயிண்ட் பாயிண்ட்டா சில அதிரடி விவரங்களைக் குறிப்பிடப் போறதா விபரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.

இந்த ரிப்போர்ட் கைக்கு வந்ததும் திமுகவோட உயர்மட்டக் குழுவைக் கூட்டி விவாதிச்சு, ஒட்டுமொத்த இளசுகளையும் கட்சிப் பக்கம் இழுக்க உதயநிதி ஸ்டாலினை கட்சியின் செயல் தலைவரா நியமிக்கிற விவகாரத்தை கையில் எடுத்து அபிஷியலா அறிவிக்க சான்ஸ் இருக்காம்; திமுக எடுக்கப்போற இந்த டாப் கியர் நடவடிக்கையால, அடுத்து வரப்போற இடைத்தேர்தல் முதற்கொண்டு கட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இனி உதயநிதி கைக்கு மாறும்னு உடன்பிறப்புகள் மத்தியில பலத்த விவாதமே ஓடிக்கிட்டு இருக்கு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments