Wednesday, July 22, 2026
Homeசெய்திகள்அஜித்குமாரின் தாயார் மறைவு – மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்!

அஜித்குமாரின் தாயார் மறைவு – மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்!

கோலிவுட் நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து, தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான இரங்கல் செய்தியில், “அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்; உயிர்கொடுத்து, தன் மகன் திரையுலகில் மாபெரும் உயரங்கள் தொட்டதைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்று உருகியுள்ளார்.

மேலும், அன்னையுடனான அழகிய நினைவுகளும் தருணங்களுமே இந்தத் தாள முடியாத துயரத்தில் இருந்து அவர் மீண்டு வரத் துணைநிற்க வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் இரங்கலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments