Friday, May 29, 2026
Homeசெய்திகள்மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . இந்த உத்தரவின்படி, கல்லூரி கல்வி ஆணையராக இருந்த இ.சுந்தரவல்லி பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளராகவும் , புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த ஆர்.லலிதா நிதித்துறை (செலவினம்) செயலாளராகவும் , தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் நிதித்துறை இணைச் செயலாளராகவும் , கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நிதித்துறை இணைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர் . கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளராகவும் , தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய முதன்மைச் செயல் அதிகாரி பூஜா குல்கர்னி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராகவும் , முன்னாள் கைத்தறித்துறை செயலாளர் வி.அமுதவல்லி ஊரக வளர்ச்சித்துறை ஆணையராகவும் , ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பி.பொன்னையா கல்லூரி கல்வி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும் , தமிழ்நாடு நீர்வடிநில மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குநர் ஆர்.கண்ணன் சர்க்கரைத்துறை ஆணையராகவும் , சென்னை பெருநகர வளர்ச்சி முகமை முதன்மைச் செயல் அதிகாரி சந்திர சேகர் சகாமூரி வேளாண் வணிகம் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநராகவும் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் எஸ்.உமா தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநராகவும் பொறுப்பேற்கவுள்ளனர் .

மாவட்ட ஆட்சியர்களைப் பொறுத்தவரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பி.பிரியங்கா பேரூராட்சி இயக்குநராக மாற்றப்பட்டு , அவருக்குப் பதிலாக உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஆர்.ரேவதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் . நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் , மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர் . முன்னாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் ஆர்.வைத்தியநாதன் தேனி மாவட்ட ஆட்சியராகவும் , திருச்சி மாவட்ட ஆட்சியர் வி.சரவணன் தர்மபுரி மாவட்ட ஆட்சியராகவும் , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும் , நிதித்துறை இணைச் செயலாளர் பிரதீக் தயாள் திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்கின்றனர் . விடுப்பிலிருந்து திரும்பிய வந்தனா கார்க் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும் , விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகவும் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநர் என்.பிரியா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராகவும் , திருச்சி மாநகராட்சி ஆணையர் எல்.மதுபாலன் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநர் ஆனந்த் மோகன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும் , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும் , கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் டாக்டர் எம்.வீரப்பன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர் .

பொது மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக இருந்த கே.பாலசுப்ரமணியம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநராகவும் , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும் , தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ் வெளிநாடு வாழ் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . மேலும், பொதுப்பணித்துறை முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா ‘பவர்ஃபின்’ (POWERFIN) தலைவராகவும் , நீர்வளத்துறை முன்னாள் செயலாளர் ஜே.ஜெயகாந்தன் பூம்புகார் கப்பல் கழகத் தலைவராகவும் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் செயலாளர் இ.சரவணவேல்ராஜ் தமிழ்நாடு கனிம நிறுவன (TAMIN) மேலாண் இயக்குநராகவும் (மேக்னசைட் நிறுவன கூடுதல் பொறுப்புடன்) நியமிக்கப்பட்டுள்ளனர் . இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த பி.என்.ஸ்ரீதர் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக மேலாண் இயக்குநராகவும் , மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் எஸ்.பி.கார்த்திகா சென்னை பெருநகர வளர்ச்சி முகமை முதன்மைச் செயல் அதிகாரியாகவும் , தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்ட முதன்மைச் செயல் அதிகாரி ஆர்.வி.ஷஜீவனா தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர் . ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலன் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளராகவும் (திறன் மேம்பாட்டுக் கழக கூடுதல் பொறுப்புடன்) , நகர் ஊரமைப்புத் துறை முன்னாள் இயக்குநர் பி.கணேசன் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராகவும் , தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவன மேலாண் இயக்குநராகவும் , வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்ட முதன்மைச் செயல் அதிகாரியாகவும் (பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட கூடுதல் பொறுப்புடன்) நியமிக்கப்பட்டு இந்த அதிரடி மாற்றப் பட்டியல் இடைவெளி விட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments