Tuesday, June 16, 2026
Homeசெய்திகள்10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது. இந்தத் தேர்வுக்கு எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துணைத்தேர்வுகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான கட்டண விவரங்கள், அட்டவணை மற்றும் கூடுதல் தகவல்களை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments