Wednesday, July 1, 2026
Homeசெய்திகள்பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்... புதிய குறைதீர் செயலியை அறிமுகப்படுத்தும் முதலமைச்சர் விஜய்!

பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்… புதிய குறைதீர் செயலியை அறிமுகப்படுத்தும் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரம்பூர் தொகுதி மக்களுக்கு என்றே பிரத்யேகமாகப் புதிய மொபைல் செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தத் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் நீண்ட நாள் குறைகள், அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை இந்தச் செயலி மூலம் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அவை அனைத்தும் உடனடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பிற்குச் சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரான முதலமைச்சரை எளிதில் தொடர்பு கொண்டு குறைகளைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீனத் திட்டம், மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளியைக் குறைத்து நிர்வாகத்தில் பெரிய வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments