Thursday, July 2, 2026
Homeசெய்திகள்NEET Re-Exam: மாணவர்கள் பங்கேற்பு 9% குறைவு!

NEET Re-Exam: மாணவர்கள் பங்கேற்பு 9% குறைவு!

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்ற நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் காரணமாக ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட மறுதேர்வை (Re-NEET) 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்துள்ளனர். இதனால் முதல்கட்டத் தேர்வோடு ஒப்பிடும்போது மாணவர்களின் வருகை சுமார் 9 சதவீதம் சரிந்து, இந்த மறுதேர்வில் வெறும் 20 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமையின் (NTA) ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன;

வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட மன உளைச்சல், தேர்வு முறையின் மீதான நம்பிக்கையிழப்பு மற்றும் இரு தேர்வுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் போன்றவையே இந்த சரிவுக்குக் காரணம் என கல்வி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், என்டிஏ (NTA) தரப்போ, ஐஐடி போன்ற பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவக் கனவைக் கைவிட்டிருக்கலாம் என்றும், வெளிநாட்டுப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தது மற்றும் ஆன்சர் கீ வெளியான பிறகு தங்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள் குறித்த சுய மதிப்பீடு போன்ற நடைமுறை காரணங்களால் மாணவர்கள் மறுதேர்வைத் தவிர்த்திருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments