Homeஆன்மீகம்கந்தசஷ்டி விரதம் – நாள் 1 விரதத்தின் தொடக்கம்!

கந்தசஷ்டி விரதம் – நாள் 1 விரதத்தின் தொடக்கம்!

கந்தசஷ்டி விரதம் – நாள் 1 (விரதத்தின் தொடக்கம்!)

நவம்பர் 10, 2026 – செவ்வாய்க்கிழமை

முருகன் வழிபாட்டில் மிகவும் முக்கியமான ஒன்று கந்தசஷ்டி விரதம்.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் ஆறாவது நாளான சஷ்டி வரை ஆறு நாட்கள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமான் சூரபத்மன் என்ற அசுரனை எதிர்த்துப் போரிட்டு அவனை வெற்றிகொண்ட திருவிளையாடலை நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது.

நாளை முதல் கந்தசஷ்டி விரதம் தொடங்குவதால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

முதல் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டின் பூஜையறையைச் சுத்தம் செய்துவிடுங்கள்.

முருகரின் படம் அல்லது சிலையை வைத்து பூஜை செய்யத் தயாராக வேண்டும்.

கந்தனுக்கு முன்பாக விளக்கேற்றி, பூக்கள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது உங்களுக்கு விருப்பமானவற்றை வயது அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

முடிந்தால் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

சில கோயில்களில் கந்தசஷ்டி விரதத் தொடக்கத்தன்று பக்தர்களுக்குக் காப்புக் கட்டும் வழக்கமும் உள்ளது.

முருகப்பெருமானை மனதில் நினைத்து, அடுத்த ஆறு நாட்களும் முருகன் நாமத்தை சொல்லி விரதம் கடைப்பிடிப்பதாக மனதிற்குள் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.

எனக்கு உடல் நிலை சரியில்லை, என்னால் உணவு உண்ணாமல் இருக்க முடியாது நான் அப்போது விரதம் கடைபிடிக்க முடியாதா என்றெல்லாம் கவலை வேண்டாம்.

அவரவர் தகுதி மற்றும் உடல்நிலைக்கேற்ப வராத நியமனங்களை நீங்களே தெரிந்தெடுத்து கொள்ளுங்கள்.

சிலர் பால், பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்வார்கள். சிலர் ஒருவேளை உணவு உண்பார்கள். இன்னும் சிலர் எளிமையான சைவ உணவை மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் இருப்பார்கள்.

முழுமையாக உணவைத் தவிர்த்து விரதம் இருப்பது அனைவருக்கும் அவசியமில்லை. உடல்நலத்தைப் பாதிக்காத வகையில் விரதம் இருப்பதே நல்லது.

முதல் நாளிலிருந்து தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது மிகவும் சிறப்பு. முழுவதுமாகப் படிக்க இயலாதவர்கள் தங்களுக்குத் தெரிந்த முருகன் பாடல்களைப் பாடலாம்.

ஓம் சரவணபவ!
ஓம் சண்முகாய நமஹ!

என்ற முருகப்பெருமானின் திருநாமங்களை 108 முறை சொல்லி வழிபடலாம்.

இந்த ஆறு நாட்களும் உணவைக் கட்டுப்படுத்துவது மட்டுமே விரதம் உண்மையான சஷ்டி விரதமில்லை.

கோபம், பொறாமை, பொய், வஞ்சகம் போன்ற தீய எண்ணங்களைக் கைவிட்டு, இயன்றவரை பிறருக்கு உதவி செய்து, மனதை இறைவழியில் செலுத்த வேண்டும்.

மற்றவர்களைப் புண்படுத்தாமல் பேசுவதும், ஏழைகளுக்கு உணவளிப்பதும், பசித்தவர்களுக்கு உதவுவதும் இந்த விரதத்தின் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ற செயல்களாகும்.

மௌனவிரதம் இருப்பது மிகவும் சிறப்பு.

கந்தசஷ்டி விரதத்தைத் தொடங்கும் முதல் நாள் முதல் முருகப்பெருமானின் திருவடிகளை நினைத்து வழிபட வேண்டும்.

முருகன் மிகவும் உக்கிரமான ஒரு கடவுள். ஆனால் அதே அளவு அன்போடு இருப்பவர். அவர் நமக்குள் இருக்கும் அறியாமை, ஆணவம், தீய எண்ணங்கள் ஆகியவற்றை அழித்து நல்லறிவையும் மனவலிமையையும் அருள வேண்டும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானின் சூரசம்ஹார வரலாற்றை நினைத்துப் பார்ப்பதும் படிப்பதும் மிகவும் சிறந்தது.

வேல் உண்டு வினையில்லை! மயில் உண்டு பயமில்லை!

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

ஓம் சரவணபவ!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments