Homeசெய்திகள்தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு இரண்டு நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் ஆளுநருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். எனினும், அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைவா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments