Thursday, March 12, 2026
HomeUncategorizedஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை 16-ந்தேதி நடை திறப்பு - திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை 16-ந்தேதி நடை திறப்பு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாடு முழுவும் கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments