Saturday, March 7, 2026
HomeUncategorizedதொடங்கியது தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம்

தொடங்கியது தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது. கடந்த மாதம் 12-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் இலக்கான 20 லட்சத்தை கடந்து 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 19-ந்தேதியும், 26-ந்தேதியும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டன. 

இந்நிலையில், தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  இன்று இரவு 8 மணி வரை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும். 

இம்முகாம்கள் மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பூங்கா உள்ளிட்டவைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments