தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா சென்ற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில், வரும் 10-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெறுகிறது.

