Tuesday, June 23, 2026
HomeUncategorizedசிவன் தலங்களில் மஹா அன்னாபிஷேகம்

சிவன் தலங்களில் மஹா அன்னாபிஷேகம்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டான நேற்று அனைத்து சிவாலங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 

அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.

சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள். சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.

வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments