திருமலை திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
அங்கு வரும் பக்தர்களுக்கு வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள், அறைகள், முடிகாணிக்கை செலுத்தும் இடம், லட்டு கவுண்டர், அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தக் கோவிலுக்கு இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழை அந்த நிறுவனத்தை சேர்ந்த தென்னிந்திய தலைவர் சந்தோஷ் சுக்லா சார்பில் தென்னிந்திய ஒன்றிய செயலர் உல்லாஜி தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.
இது திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

