முதலமைச்சர் முகவரி- புதிய துறை குறித்து அரசாணை வெளியீடு
முதலமைச்சர்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி துறையில் மனுக்கள் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

