Friday, March 6, 2026
HomeUncategorizedஅதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு

அதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு

நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை.. டிசம்பர் 1ல் நடந்த பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் 7ஆம் தேதி நடத்தப்படும் என 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.. சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகிறார்கள் உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை,

உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டும் 2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் வழக்கு நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு முறையீடு மதியம் விசாரணை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments