Thursday, March 12, 2026
HomeUncategorizedமொத்தம் ஐந்து படங்கள் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகுது

மொத்தம் ஐந்து படங்கள் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகுது

மொத்தம் ஐந்து படங்கள் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகுது. இசையமைப்பாளரும், நடிகருமான ஹப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ளது அன்பறிவு. படத்திற்கான கதையை ஆதியே எழுதியுள்ளார். இதற்கு முன் ஆதி நடிப்பில் உருவான சிவகுமாரின் சபதம் படமும் ஹாட் ஸ்டாரில் வெளீயானது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா படமாக தியேட்டர்களில் வெளியான புஷ்பா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு படங்களான வருடுகாவலேனு படம் ஜீ 5 ஓடிடி தளத்திலும், லக்ஷயா படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. அதேபோல் ஜிவி பிரகாஷை வைத்து வசந்தபாலன் இயக்கி தியேட்டர்களில் வெளியான ஜெயில் படம் டெண்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments