Saturday, March 14, 2026
HomeUncategorizedசிவகார்த்திகேயனுடன் இணையும் கமல் பட நிறுவனம்....

சிவகார்த்திகேயனுடன் இணையும் கமல் பட நிறுவனம்….

கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ராஜ்குமார் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டைரக்டர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜ்குமார் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை டைரக்டு செய்துள்ளார்.

இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு இயக்குனராக பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் படப்பிடிப்பில் கமல்ஹாசனிடம் ராஜ்குமார் ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை பிடித்துபோய் தனது ராஜ்கமல் பட நிறுவனம் மூலம் தயாரிக்க கமல்ஹாசன் முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments