Wednesday, March 4, 2026
HomeUncategorizedநொய்டா திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள சூர்யா நடிப்பில் வெளியாகி ஜெய்பீம் 

நொய்டா திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள சூர்யா நடிப்பில் வெளியாகி ஜெய்பீம் 

சூர்யா நடிப்பில் வெளியாகி பல பாராட்டுகளை பெற்ற ஜெய்பீம் திரைப்படம் நொய்டா திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் டைரக்‌ஷனில் உருவான படம் ஜெய்பீம். 

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

ஜெய்பீம் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் ஆஸ்கர் விருது வரை சென்று வந்தது. சமீபத்தில் ஆஸ்கர் விழாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் இடம்பெற்றதை ரசிகர்கள் ஆர்வமாக ட்ரெண்ட் செய்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது ஜெய்பீம் நொய்டாவில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. 

இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments