Tuesday, March 3, 2026
HomeUncategorizedஐதராபாத்த்தில்  ராமானுஜரின் சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி

ஐதராபாத்த்தில்  ராமானுஜரின் சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்த்தில் இன்று ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ஐம்பொன் சிலையை இந்திய பிரதமர் மோடி நேற்று திறந்துவைக்கிறார்.

இந்த சமத்துவத்திற்கான சிலை திறப்பு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில் அவர் சார்ந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் முழுமையாக புறக்கணித்து உள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.. காய்ச்சல் காரணமாக தான் கலந்து கொள்ள முடியவில்லை என தெலங்கானா முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments