Wednesday, March 11, 2026
HomeUncategorizedபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு

பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்குப் பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி  நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள், அடுத்து இதனை தொகுத்து வழங்கப்போவது யார் என முணுமுணுத்து வந்தனர். இந்நிலையில் இதனை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு களம் இறங்கியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சிம்பு இடம்பெற்றுள்ள புரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. புரோமோ வீடியோவில் செம்ம ஸ்டைலிஷ் லுக்குடன், “எதிர்பார்கலல்ல… நானே எதிர்பார்க்கல.. பார்க்கலாமா” என்று பேசி எதிர்பார்ப்பைக் கிளப்புகிறார் சிம்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments