உலகிலேயே சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியை செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.கொரானா குறைந்ததால் தடுப்பூசி போட வேண்டாம் என்பதில்லாமல் தடுப்பூசி போட்டதால் தான் கொரானா இல்லை. தடுப்பூசி போட்டதால் தான் எத்தனை அலை வந்தாலும் கொரானாவை கட்டுப்படுத்த முடியும்.
. 27ம் தேதி புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது. அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்து எல்லோரும் பள்ளிகளை நோக்கி வர வேண்டும். அரசுப்பள்ளி அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்தப்படுவதை போல புதுச்சேரியில் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு அரசு மாதிரி இன்னொரு அரசு இருக்க முடியாது.

