Wednesday, February 4, 2026
HomeUncategorizedகொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி - நிதியமைச்சர்

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி – நிதியமைச்சர்

காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு 496.52 கோடி ஒதுக்கீடு. டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு. குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல். வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. கால்நடை பராமரிப்புக்காக ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்கப்படும்.

சென்னைக்கு அருகே ரூ.200 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும். தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு. வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது,

அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி. ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். அரசு நிலங்களை குத்தகைக்கு விடும் சிக்கல்களை தீர்க்கவும், வெளிப்படையான குத்தகைக்கு விடவும் விரிவான ‘நில குத்தகை கொள்கை’ வகுக்கப்படும்.

அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.:

தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள். வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி ஒதுக்கீடு. விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு. நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments