கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் முடங்கி கிடந்த நிலையில் இப்பொழுது தான் அனைவரும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். திரைத்துறையிலும் இப்பொழுதுதான் சுமூக நிலையை அடைந்துள்ளது. திரைப்படங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் அருண்விஜய் அவர்கள் இந்த இரண்டு ஆண்டு காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் தொலைபேசி வாயிலாகவும் வீடியோ கால் மூலமாக ரசிகர்களையும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் நலம் விசாரித்து உரையாடல் மேற்கொண்டு வந்தார், தற்போது இயல்பு நிலை அடைந்துள்ள நிலையில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார், அது மட்டுமின்றி இரண்டாண்டுகள் கழித்து அவருடைய திரைப்படங்கள் யானை, சினம், பார்டர், ஓ மை டாக், அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் மிக விரைவில் வெளியாக இருக்கிறது அதை தொடர்ந்து கடந்த மாதம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டார் திருவண்ணாமலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

