Saturday, March 7, 2026
HomeUncategorizedடி.வி.சுந்தரம் ஐயங்கார் காலமான தினமின்று

டி.வி.சுந்தரம் ஐயங்கார் காலமான தினமின்று

இவர் தான் நாம் தினசரி பயன்படுத்தி வரும் TVS இருசக்கர வாகனத்தின் நிறுவனர். வாகன உலகில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தவர். சுந்தரம் அவர்கள் முதல் முதலில் இருசக்கர வாகன நிறுவனத்தை ஆரம்பிக்கவில்லை. அவர் முதன்முதலில் அரம்பித்தது பேருந்து சேவையாகும். அவர் தான் முதன்முதலில் தென்னிந்தியாவிலே தமிழகத்தில் தஞ்சையில் பேருந்து சேவையை ஏற்படுத்தியவர். இந்தியாவிலே பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதையும் போவதையும் உறுதி செய்தவர். 

இரண்டாம் உலகபோரின் காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கரியில் இயங்கும் பேருந்துகளை இயக்கினார் சுந்தரம். இதற்காக முதல் முதலில் பெட்ரோல் பங்க்குகளை போல கரி நிரப்பும் நிலையங்களை அமைத்தவர் சுந்தரம். பின்னர் சந்தரம் அவர்கள் ஆரம்பித்த ஆட்டோ சர்வீஸ் ஸ்டேசன் தான் ஆசியாவிலேயே முதல் சர்வீஸ் ஸ்டேசனாகும். 

சுந்தரம் அவர்கள் ஒரு முற்போக்கு சிந்தனைவாதி அதனால் தன் விதவை மகள் விரும்பிய வேறு சாதி பையனுக்கு திருமணம் செய்து வைத்தார்.சுந்தரம் அவர்கள் இறந்த பிறகு மத்திய அரசு அவருக்கு வெண்கல சிலை திறத்து வைத்துள்ளது. 

சுந்தரம் இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவத்தை துவங்குவதற்கு முன் கூட்ஸ் சர்வீஸ் நிறுவனத்தையும் வைத்திருந்தார் 

மேலும் பல முன்னணி கார் நிறுவங்களின் விற்பனை உரிம ஏஜன்டாகவும் இருந்தவர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments