Thursday, March 5, 2026
HomeUncategorizedகேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சம்

குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்துருக்குது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

மேலும், பொதுமக்களிடம் இந்த  புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர். 

கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments