Monday, March 23, 2026
HomeUncategorizedகள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடலுக்கு கண்டனம் - மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படாது

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடலுக்கு கண்டனம் – மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படாது

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். 

உலகத்தரமான கல்வியை வழங்கிவரும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், ஆசிரியப் பெருமக்களும், எங்களிடம் பயிலும் பல லட்சம் மாணவ, மாணவியரை எங்கள் சொந்த குழந்தைகள் போல் நடத்திவருவதை ஒவ்வொரு பெற்றோரும் அறிவார்கள்.  

இந்த நிலையில், சக்தி பள்ளியில் நடந்த துயரமான சூழலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பள்ளியில் பயிலும் 3500 மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை அழித்ததும், பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதும், பள்ளி உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றதும் மன்னிக்க முடியாத சமூக விரோதச் செயல்கள் ஆகும். 

இத்தைகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் எந்த நிறுவனத்திலும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு விதிகளை உருவாக்கி அரசாணை பிறப்பித்திட வேண்டி, மாநில உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் நாளை (திங்கட்கிழமை) தனியார் பள்ளி நிர்வாகிகளும், தனியார் பள்ளி பெற்றோர் சங்கங்களும் சேர்ந்து மனு அளிக்க உள்ளதால், நாளை மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது.

தனியார் பள்ளிகளின் அனைத்து சங்கங்கள் மற்றும் அனைத்து கூட்டமைப்புகளின் இணையவழி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

DC இளங்கோவன் 
பொதுச்செயலாளர் 
FAPSIT கூட்டமைப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments