Friday, February 6, 2026
HomeUncategorizedஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார கால அவகாசம் கேட்டு...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 3 வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஆணையத்துக்கு நாளையும் அவகாசம் முடிவடைய இருந்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குநரகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி அந்த குழு பலரிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்த குழுவின் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என கமிஷனிடம் கூறியிருந்தது.

இதனையடுத்து மேலும் 3 வாரம் கால அவகாசம் வேண்டும் எனக்கூறி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments