Friday, February 6, 2026
HomeUncategorizedகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் வெற்றி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் வெற்றி

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இரு அவைகளிலும் மொத்தமாக 780 எம்.பிக்கள் உள்ள நிலையில், அதில் 725 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 36 எம்.பிக்கள் உள்ள நிலையில், அதில் 23 எம்.பிக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments