நாட்டின் முதல் சிறிய ரக ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி இன்று காலை விண்ணில் பாய்ந்த நிலையில், இறுதி கட்டத்தில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்திருந்தது.
தொலைந்த தொடர்பை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக இஸ்ரோ அமைப்பு ட்விட்டரில் கூறியிருந்த நிலையில், தற்போது ஏவப்பட்ட செயற்கைகோளை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ராக்கெட் மிஷன் தோல்விக்கு சென்சார் செயலிழப்பே காரணமாக இருக்கலாம் என்றும், மேலும் இதை பற்றி இஸ்ரோ ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

