Wednesday, February 4, 2026
HomeUncategorizedபுனித அருளானந்தர் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

புனித அருளானந்தர் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், சிறுமிகள் மூன்று பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதில் பங்குத்தந்தை சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.

சிவங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராபர்ட் (46). இவர் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்துவருகிறார்.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மண்டபம் பகுதியிலிருந்து பிரார்த்தனைக்கு வந்திருந்த மூன்று சிறுமிகளை மட்டும் பங்குத்தந்தை ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும்விதமான ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டே சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments