Saturday, March 21, 2026
HomeUncategorizedபிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக விளங்குபவர் கபிலன். 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவரது மகள் தூரிகை (28). எம்பிஏ படித்துள்ளார்.

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று பண்முகத் திறமை உள்ளவர். பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் இன்று மாலை சென்னை அரும்பாக்கம்
எம்.எம்.டி.ஏ. காலனி மார்கெட் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அவரது அம்மா அவரை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு‌சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தூரிகை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments