Thursday, February 5, 2026
HomeUncategorizedஅதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி நேற்று பதில் மனு அளித்தார்.

அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் சாவியை ஒப்படைக்கக்கூடாது என பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக அலுவலக சாவியை உரிமை கோர முடியாது, ஓபிஎஸ் தந்து ஆதரவாளர்களுடன் சேர்ந்து அதிமுக அலுவலக பொருட்களை சேதப்படுத்தியுள்ளார் என பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

தென்சென்னை வருவாய் கோட்டாட்சியரும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக அலுவலக பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்பாடுகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments