Thursday, February 5, 2026
HomeUncategorizedதிமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்..!

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்..!

பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மீது அதிருப்தியால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்காததால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், கட்சியில் தொடர்ந்து துணை பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதாக சுப்புலட்சுமி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோற்றிருந்தார் சுப்புலட்சுமி.

திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் மகளிர் பிரதிநித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments