Thursday, February 5, 2026
HomeUncategorizedகுளிகை என்றால் என்ன? அந்த நாளில் என்ன செய்யவேண்டும்?

குளிகை என்றால் என்ன? அந்த நாளில் என்ன செய்யவேண்டும்?

இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ,அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகுகாலமாக இருந்து வருகிறது. 

இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும்,ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது,கடனைத் திருப்பிக் கொடுப்பது,சுப நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால் அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி,இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும்.

ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments