Wednesday, February 4, 2026
HomeUncategorizedநிஜ தேவதையாக வலம் வந்த நடிகை ஷோபா பிறந்த நாளின்று..!

நிஜ தேவதையாக வலம் வந்த நடிகை ஷோபா பிறந்த நாளின்று..!

நம் தமிழ் சினிமாவில் எவ்வளவோ மநடிகைகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் பல பேரை ரசிகர்கள் மறந்தே போய் விட்டார்கள் 

செல்போனில் அடங்கி விட்ட அடுத்தடுத்த தலைமுறை வரும் போது, ‘யாரது? அப்படியொரு நடிகை இருந்தாங்களா?’ என்று கேட்டதும்/ கேட்பதும்  நடந்துகொண்டேதான் இருக்கிறது. 

அதே சமயம் மிகச் சிலரை, இன்னும் மறக்காமல் இருக்கிறது தமிழ் உலகம்.

அந்த வகையில் இத்தனைக்கும் பூசின உடம்பு இல்லை. கவர்ச்சிக் காட்டியெல்லாம் நடிக்கவில்லை. வத்தலும்தொத்தல் உடம்புதான்.

நடித்த படங்கள் கூட 25ஐத் தாண்டவில்லை. தலைமுறைகளும் கடந்துவிட்டன. ஆனாலும் அவரை மறக்கவில்லை ரசிகர்கள். மறக்கவே முடியாத நடிகை அவர். 
அதற்குக் காரணம்… அந்த முகம். நம் தெருவில் உள்ள பெண்ணைப் போன்றதொரு முகம். அந்தச் சிரிப்பு. எந்தக் கல்மிஷமோ விகல்பமோ பொய்யோ இல்லாத வெள்ளந்தியானச் சிரிப்பு. நம் வீட்டுப் பெண்ணைப் போன்றதொரு சிரிப்பு.

குழந்தைத்தனமான சிரிப்பு. அந்தக் குழந்தைமைதான் குழந்தைமையும் கொஞ்சம் மேதைமைத்தனமும்தான் நம்மை ஈர்த்துப் போட்டது. இன்னமும் அவரை… இந்த நிமிடம் கூட, தமிழ் சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் எங்கேனும் இருந்துகொண்டு, அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பெயர்… ஷோபா.  

இன்று இருந்திருந்தால் அந்த மகத்தான நடிகைக்கு 59வது பிறந்தநாள். இல்லை என்றாலும், ரசிகர்கள் நினைவுகளால் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது

கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பது இவருக்கு இயல்பாகவே வந்ததால், தான் இன்னமும் இவரை ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணை பார்ப்பது போலவே பார்க்கிறார்கள்.

இயக்குநர் துரை இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான பசி படத்திற்காக தேசிய விருதை தட்டிச் சென்றார் நடிகை ஷோபா.

ஏழ்மையே உருவான குப்பம்மா கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதை இன்றைய தலைமுறையினரும் பார்த்து நடிப்பு பாடம் கற்றுக் கொள்ளலாம். அந்த பசி நாயகியை அரசாங்கமே வியந்து பாராட்டி. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.  

பாலு மகேந்திராவின், ‘அழியாத கோலங்கள்’, ‘மூடுபனி’ ஆகிய படங்களில் தனித்து மிளிர்ந்தார் ஷோபா அதற்கான காரணமாக, ”கேமிரா, லைட்ஸ் மற்றும் ஃபிலிம் ஆகியவற்றோடு மற்றவர்கள் ஒளிப்பதிவு செய்வார்கள். அங்கிள் (பாலு மகேந்திரா) இவற்றோடு நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார்” எனச் சொன்னவர், ஷோபா.

பாலய வயதில் நடிக்க வந்தவருக்கு இளம் வயதுதான். எல்லாமே அவசரம் அவசரமாக வந்தது. மரணம் உட்பட! ஷோபா எனும் கனவுலகின் நிஜ தேவதைக்கு இறக்கும் போது பதினெட்டு வயதுதான். தமிழில் 17 படங்கள் வரை நடித்துவிட்டார்.

1962ம் ஆண்டு பிறந்த ஷோபா, 78ம் ஆண்டு ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் அறிமுகமான ஷோபா, 1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இறந்தார். பதினெட்டு வயது கூட பூர்த்தியாகாத நிலையில் இறந்த  அந்த ஷோபாவுக்கு, இன்று செப்டம்பர் 23ம் தேதி பிறந்தநாள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments