கூகுள் மீட்டில் உரையாடும் விஷயத்தை, எழுத்து வடிவத்துக்கு மாற்றி அதை கூகுள் டாக்குமென்ட்டில் இருந்து டவுன்லோடு செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் மீட்டில் உரையாடும்போது கோப்புகளில் குறிப்பெடுக்க கடினமாக இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, கூகுள் இந்த வசதியை உருவாக்கியுள்ளது. அதிகபட்சமாக 200 பேரின் உரையாடல் வரை இதில் எழுத்து வடிவில் பெற முடியும்.

