Thursday, March 12, 2026
HomeUncategorizedகுரங்கு அம்மை நோய் பரவல் தீவிரம்: சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்

குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரம்: சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்

குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனிவா,

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் மூன்றாவது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், “உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன, மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 உறுதிப்படுத்தப்பட்டகுரங்கு அம்மை நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகள் ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments