Friday, March 13, 2026
HomeUncategorizedயானையின் பெயரால் ஊர் 

யானையின் பெயரால் ஊர் 

ஒருமுறை கயிலாயம் சென்று ஈசனை தரிசித்தார் மிகவும் கோபக்காரரான துர்வாச முனிவர். 

அவரது பக்தியை மெச்சிய சிவபெருமான், பொன்மாலை ஒன்றை தன் திருமுடியிலிருந்து  எடுத்து துர்வாச முனிவருக்குத் தந்தார்.

முனிவரும் மனம் மகிழ்ந்து, நன்றி தெரிவித்துவிட்டு,  அந்த மலரை தன் கமண்டலத்தில் வைத்து எடுத்துக்கொண்டு புறப்பட்டார். 

அப்போது, தேவலோக அதிபதி இந்திரன் தேவர்களைக் காக்கும் பொருட்டு, விருத்திகாசுரன் என்னும் கொடியவனை வென்றுவிட்டு, தனது வாகனமான,  வெள்ளைநிறத்துடன் காணப்படும், ஐராவதம் என்கிற பெயருடைய யானையின் மீதேறி, பலரும் புடைசூழ, வெற்றி ஊர்வலம் வந்தான். 

துர்வாச முனிவரும், இந்திரனும் நேருக்கு நேர் சந்தித்தனர். 

வெற்றி நாயகனான இந்திரனை வாழ்த்தி, ஈசன் தனக்களித்த பொன்மாலையை இந்திரனுக்கு வழங்கினார். 

ஆணவத்தின் உச்சத்திலிருந்த இந்திரன் யானையின் மீதிருந்தபடியே, அம்மாலையை அலட்சியமாக பெற்றுக்கொண்டு, அதே பாவனையுடன் ஐராவதயானையின் மத்தகத்தின் (தலையின்) மீது வைத்தான். 

இதைக்கண்டு துர்வாச முனிவர் மனதில் கோபம் அக்னியாய் பற்றி எரிந்தது. 

போதாக்குறைக்கு ஐராவதம் யானையானது தன் தலையில் வைக்கப்பட்ட அந்த பொன்மாலையை தும்பிக்கையால் எடுத்து கீழே போட்டு மிதித்தது. 

அவ்வளவுதான் ஆத்திரத்தின் உச்சிக்கே போனார் துர்வாசர். 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments