Thursday, March 19, 2026
HomeUncategorized8000 அகல் மின் விளக்குகள் ஒளிவெள்ளத்தில் வடபழனி ஆண்டவர் திருக்கோயில்

8000 அகல் மின் விளக்குகள் ஒளிவெள்ளத்தில் வடபழனி ஆண்டவர் திருக்கோயில்

கார்த்திகை தீப திருநாளையொட்டி வடபழனி பழனி ஆண்டவர் திருக்கோயிலில் டிசம்பர் 5, 6, 7ஆம் தேதிகளில்  மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர் முழுவதிலும் அகல் விளக்குகளை போன்று 8 ஆயிரம் மின் விளக்குகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது . இதற்காக மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கோயிலில் உற்சாகத்துடன் துவங்கி உள்ளது.

அதேபோல் வள்ளி தேவசேனா சந்நிதி எதிரில் 108 குத்து விளக்குகள்  அலங்காரம் ஏற்றப்பட உள்ளது. தீபதிருநாளன்று மூலவர் பழனி ஆண்டவருக்கு சிறப்பு  அபிஷேக வழிபாடுகள் செய்யப்பட்டு செண்பக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

தீபதிருநாளை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோயில் விழா கோலம் பூண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments