Wednesday, March 18, 2026
HomeUncategorizedதிரைப்பட நடிகர் சிவநாராயணமுர்த்தி காலமானார்

திரைப்பட நடிகர் சிவநாராயணமுர்த்தி காலமானார்

நடிகர் சிவ நாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது வயது 67. தமிழில் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இயக்குநர் விசுவால் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவ நாராயணமூர்த்தி, பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார்.

நடிகர் வடிவேலுடன் இவர் இணைந்து நடித்த காட்சிகள் மிக பிரபலம். பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தி, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், புதுக்கோட்டை அருகேயுள்ள அணைக்கட்டு கிராமத்திற்கு சென்று குடும்பத்துடன் வசிப்பது வழக்கம். அதன்படி சொந்த ஊர் சென்றவர் நேற்றிரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகனும் உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments