நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
உண்மை கதையை மையமாக வைத்து எடுத்திருக்கும் இயக்குநர் இந்தப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடலின் லிரிக் காணொளி படக்குழுயினரால் வெளியிட்டன.
தற்போது வரை இந்த காணொளி இணையவாசிகளால் அதிகமாக பார்க்கப்பட்ட காணொளி என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

