Sunday, March 15, 2026
HomeUncategorized”சிவனும் ஜெயிலும்”

”சிவனும் ஜெயிலும்”

திருவாசகம் ஓர் அரிய நூல்.  தமிழன்னைக்கு  அழகான ஆபரணமாக அமைந்த ஐப்பெரும் காப்பியங்களைத்  தாண்டியும்,  வேறுபல நூல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் திருவாசகம். 

இறைவன் கூற மனிதன் கேட்டது?   பகவத் கீதை. மனிதன் கூற இறைவன் சிவன் எழுதியது  திருவாசகம். 

ஆகச்சிறந்த அற்புதமான படைப்பு அது.  ” இறைவனும் திருவாசகமும் வேறு வேறல்ல ” என்று உள்ளார்ந்து உணர்ந்த  அடியவர் திருக்கூட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல… 

தமிழகத்திலிருந்து ”திரை கடலோடியும் திரவியம் தேட” ச்சென்ற தமிழ்ப்பெருமக்கள் திருவாசகத்தின் பெருமையை உணர்ந்து, தங்கள் வாழ்வினை உய்வித்துக்கொள்ள திருவாசக நூலையும் கையோடு கொண்டு சென்று, காலங்காலமாக பூசித்து; நேசித்து இல்லறத்திலும் நல்லறம் கண்டவர்கள் பலர். 

அவர்களில் ஆண் பெண் பேதங்களில்லை.  உடலுக்குத்தானே ஆண்-பெண் பேதம் ! ஆன்மாவிற்கு இல்லையே… இதுதானே சனாதனம் நமக்குக் கற்றுத்தந்தது. 

அப்படிப்பட்ட திருவாசகத்தின் பக்தர் ஒருவர் பர்மா தேசத்தின் ரங்கோனில் (இன்றைய மியான்மர் தேசத்தின் “ யாங்கோன் “ ) வசித்து வந்தார். அவர் பெயர் கந்தசாமி செட்டியார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments