Friday, March 13, 2026
HomeUncategorizedமயில்சாமி என்னும் போராளி

மயில்சாமி என்னும் போராளி

கடந்த சில தினங்களாகவே அதிகாலையில் வரும் போன் கால்கள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. இன்று அப்படி ஓர் அதிர்ச்சி தகவலாக நண்பர் மயில்சாமியின் இறப்பு செய்தி. 20 ஆண்டுகால நட்பு. இருவரும் ஒருவருக்கொருவர் பல ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டுள்ளோம்.

அவரது உதவும் குணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மயில்சாமி செய்த உதவிகளில் பல உதவிகள் வெளியில் தெரியாதவை. கொரோனா சமயத்தில் நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்தபோது உறுதுணையாக இருந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லும் திறந்த மனதுக்காரர்.

தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்லாது எனக்கும் தனிப்பட்ட முறையில் இது பேரிழப்பு. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நண்பர்களுக்கு நான் எப்போதும் சொல்லும் அறிவுரை ஒன்று தான்.

இதற்கு பிறகான வாழ்நாள் நமக்கு கிடைத்த போனஸ். எனவே இதற்கு பின் ஆரோக்கியத்தில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். பூச்சி எஸ்.முருகன் துணைத் தலைவர் தென்னிந்திய நடிகர் சங்கம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments