நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்தினை, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் பிளட் அண்ட் பேட்டில்’ (Blood and Battle) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணொளி, தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

