தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ 20 குறைந்தது.
சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.20 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்று கோயம்பேடு சந்தைக்கு 550 டன் தக்காளி வந்துள்ளது. சென்னையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் விலைக்கு கிடைக்கிறது என்பதால் அதிகபட்சம் 100 ரூபாய் விலையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிடைக்கும். இதனால் கடந்த பல நாட்களுக்குப் பிறகு தக்காளி விலை நூறு ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது என்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் முதல் ரக தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை வாங்க நடுத்தர மக்கள் அதிகம் ஆர்வம் காட்டாத நிலையில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் இரண்டாம் ரக தக்காளி அதிக அளவில் விற்பனையாகிறது.

