Saturday, April 18, 2026
HomeUncategorizedவிமானத்தில் தீப்பிடிப்பு- பத்திரமாக தரையிறக்கம்

விமானத்தில் தீப்பிடிப்பு- பத்திரமாக தரையிறக்கம்

அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லஸ் ஏர் சரக்கு விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுள்ளது. ஆனால், விமானம் புறப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் எஞ்சினில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக விமானத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து அதே விமான நிலையத்திற்கு அவசர அவசரமாக திரும்பிய அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து அட்லஸ் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வழிகாட்டு நெறிமுறைகளை விமான குழுவினர் பின்பற்றியுள்ளனர்.

மியாமி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் பாதுகாப்பாக திரும்பியது. நேற்று பிற்பகுதியில் நடந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments