Tuesday, April 7, 2026
HomeUncategorizedவாஞ்சிநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

வாஞ்சிநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

காசிக்கு நிகரான ஆறு காவிரி கரை தலங்களில் ஒன்றான ஸ்ரீ_வாஞ்சியம் ஸ்ரீ_மங்களாம்பிகை உடனாகிய ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை தருமையாதீன திருப்பணி வேந்தர் #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெற்றது!!!

இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய பரம்பரை துழாவூர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள், துழாவூர் ஆதீன இளவரசு சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு சுவாமிகள், தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள்,சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், அடியார்கள், பக்தர்கள், தருமையாதீன தேவார வேத பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!

முன்னதாக ஸ்ரீ வாஞ்சியம் தருமையாதீன கட்டளை மடத்தில் ஸ்ரீ சொக்கநாதர் பூஜை, கோபூஜை செய்தார்கள்!!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments