தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
